31.5.10

வரம் தரும் நாக்கு


பற்களும் நாக்கும் சந்திக்கும் போது நலம் விசாரித்துக்கொண்டு பேசுவது வழகமாம்.. ஒரு நாள் நாக்கு பல்லைப் பார்த்தவுடன் பல்தம்பி பல்தம்பி நலமா? என்றதாம். நாக்குதான் அண்ணா. பல்தான் தம்பி.. ஏனென்றால் நாக்கு இந்த உலகத்துக்கு மும்பே வந்துவிடுகிறது. பல் பின்னாலேதான் வருகிறது.. உடனே பல் கூறியதாம் நீங்க நலமாய் இருந்தா நாங்க உங்க புண்ணியத்துல நலமாய் இருப்போம் என்றதாம்.. ஆம் ஏதாவது சொல்லி வம்பை விலைக்கு வாங்குவது இந்த நாக்கின் வேலை..... அதனால் உடைபட்டு உருவிழந்து போவது பல்தானே....பாவம் பல்..

"உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது என்று கேட்டு ’நாக்குதான்’ என்று சிறு சொற்களால் இந்த உலகத்தையே அழிக்க வல்ல இந்த நாக்கை நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷணன் கூறுவார்..


சுவையாகச் சாப்பிடுபவரை நாக்கு மட்டும் ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் என்று கிண்டலாகக் கூறுவது உண்டு. இந்த நாக்குக்கு இந்த ஆறு சுவைகளின் ருசி போதாதாம்.. அறுசுவைகளை ருசிப்பது மட்டும் இல்லாமல் இப்போது எலும்பு இல்லாத இந்த நாக்கு தன்னுடைய நரம்புகளின் உதவியுடன் ஏழாவது சுவையையும் ருசிக்கிறது. சுவை மிக்க ருசியான உணவு கிடைக்காத போது நாக்கு செத்தே போயிடுச்சு என்றும் கூறுவதைக் கேட்டிருப்போம். இந்த நாக்கு செத்துப்போன கண்களுக்கு உயிர் கொடுக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். இதனால் தான் திருவள்ளுவர் “ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்” என்று கூறினார் போலும். இந்த அதிசயத்தை நம்பாதவர்கள் இதைப்படிங்க முதல்ல...

நாக்கு தன்னுடைய சுவையறி நரம்புகளால் காட்சிகளை அறிந்து, மூளை வழியாகக் கண்களுக்குத் தெரிவிக்கும் மற்றொரு அருமையான பணியைச் செய்கிறது. இதற்கு ஒரு புதிய மின்சாரக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனா, ஆஸ்திரேலியாவின் மெல்போன் நக்ரின் மருத்துவ விஞ்ஞானிகள். இந்த அசாதாரணத் தொழில் நுட்பக் க்ருவியின் பெயர் ப்ரைன் போர்ட் விஷன் டிவைஸ் (Brain port vision device).

இதன் அமைப்பு:
இது சுவையறி நரம்புகளின் உதவியால் (Sensory substitution) மின்னதிவுகள் மூலமாக் (Electrotactile stimulation) காண்பவற்றை மூளைக்கு அறிவித்து, அங்கு காட்சியாக மாற்றும் ஒரு கருவி. இது கைக்குள் அடங்கும் மிகச்சிறிய வடிவில் அமைந்துள்ளது. இதில் ஒரு கட்டுப்பாட்டுக் கோலும் (control unit), ஒரு கறுப்புக் கண்ணாடியும் (Sun Glass), அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பும், அதன் முடிவில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் லாலி பாப் (Lolli pop) வடிவிலான பிளாஸ்டிக் கைப்பிடியும் அமைந்துள்ளன. கறுப்புக் கண்ணாடியின் நடுவில் 25 செ.மீ. விட்டமுள்ள சிறிய டிஜிட்டல் கேமரா (Digital wdeo camera) பொருத்தப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு கைப்பேசி அளவுதான் இருக்கும்.


செயல் படும் முறை:
இதனைஅணியும் போது காட்சிகள் கேமராவில் படமாக்கப்பட்டு கையினால் இயக்கப்படும் கண்ட்ரோல் கோலுக்கு அனுப்பப் படுகிறது. இங்கு பதிவான காட்சிகள், மின்னதிவுகளாக மாற்றப்பட்டு நாவின் மீது வைக்கப்படும் லாலி பாப்பின் மூலம் நாக்கு நரம்புகளால் உணரப்படுகிறது. இந்த மெல்லிய உணர்வுகள் நரமபுக்ளின் வழியாக மூளைக்குச் சென்றடையும் போது காட்சிகளாகக் காண முடிகிறது. கையில் உள்ள கண்ட்ரோல் கோலின் உதவியால் காட்சிகளைத் தேவைக்கேற்பப் பெரிதாக்கிக் கொள்ளவும் (Zoom) முடியும்.

இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் இக்கண்டுபிடிப்பு பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறியவும், பிறர் உதவியின்றி எங்கும் செல்லவும் பயன்படும் என்கின்றனர். மற்றொரு முக்கியமான பயன் இதன் உதவியால் துள்ளியமாகப் பார்க்கவும் முடியுமாம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இக்கருவையைச் சோதித்த போது இதைப் பயன் படுத்திய பார்வையற்ற ஒருவர் சுழன்று வந்த டென்னிஸ் பந்தை மிக எளிதாகப் பிடித்தாராம். அப்போது அவர் கணப்பொழுதில் நாக்கால் காட்சியை எளிதாக உணர்ந்ததாகக் கூறி வியந்தாராம்.

முதன் முதலில் இக்கருவியை வாங்கிப் பயன்படுத்திய பார்வையற்ற ஒருவர் எழுத்துக்களைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். ஆனால் இக்கருவியைப் பயன் படுத்திப் புத்தகம் படிப்பது அவ்வளவு நல்லது இல்லை என்கின்றனர்.


இந்தக் கருவியைப் பயன்படுத்தும் முறையை ஒருவர் கற்றுக்கொள்ள சுமார் இருபது மணி நேரம்தான் ஆகுமாம். கண் பார்வை இல்லாதவர்களுக்குக் கண் கண்ட இல்லை இல்லை நாக்கு கண்ட தெய்வம் இந்தக் கருவி. வாழ்க இதைக் கண்டறிந்த் விஞ்ஞானிகள்!!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக