6.6.10

கூகுலுக்கு போட்டியாக‌...




கூகுல் சீனாவில் இருந்து வெளியேறுமா இல்லையா என்பது தெரியவில்லை;ஆனால் சீனாவில் கூகுலைப்போலவே தேடிய‌ந்திரம் ஒன்று உதயமாகியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. (நன்றி;http://news.bbc.co.uk/2/hi/technology/8483597.stm

அச்சு அசல் கூகுலைப்போல‌வே வடிவமைப்பு கொண்ட அந்த தேடியந்திரத்தின் பெயரும் கிட்டத்தட்ட கூகுல் போலவே இருக்கிற‌து.கூஜே; இது தான அந்த‌ தேடியந்திரத்தின் பெயர்.

கூகுல் எழுத்துக்களைப்போலவே இதன் லோகோவும் அமைந்துள்ளது.ஆனால் ஜெ ஜே என்னும் வார்த்தை சீன மொழிக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளதாம்.

கூஜே என்றால் சீன் மொழியில் அக்கா என்று பொருளாம்.

இந்த தேடியந்திரத்தின் நோக்கம் பின்னணி பற்றிய விவரங்களை தெரியவில்லை.ஆனால் கூகுக்லைப்போல‌ முர‌ண்டு பிடிக்காம‌ல் சீன‌ அர‌சுக்கு ஏற்ப‌ இது தேட‌ல் முடிவுக‌ளை த‌ணிக்கைக்கு உள்ளாக்கியுள்ள‌தாக‌ தெரிகிற‌து.

இந்த‌ த‌ள‌த்தின் முக‌ப்பு ப‌க்க‌த்தில் ‘ த‌ம்பி வெளியேறும் முடிவை கைவிட்ட‌தால் அக்காவுக்கு ம‌கிழ்ச்சி ‘ என‌ குறிப்ப‌ட‌ப்ப‌ட்டுள்ள‌தாம். இத‌ன் பொருள‌ என்ன‌ என்று தெரிய‌வில்லை.

——–http://www.goojje.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக