7.6.10

ஆடியோ வடிவில் தகவல்களைமாற்ற‌....


பாடல்களை மட்டும் தான் கேட்டு ரசிக்க வேண்டுமா? செய்திகளை கேட்டு ரசித்தால் என்ன?அதே போல வலைப்பதிவுகளையும் படிக்காமல் கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்?

அற்புதமாக தான் இருக்கும் ஆனால் இது எப்ப‌டி சாத்தியம் என கேட்பவராக இருந்தால் கவலையே வேண்டாம். இதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.கேரி யுவர் டெக்ஸ்ட் என்பது அந்த தளத்தின் பெயர்.

பெயருக்கு ஏற்ப உங்கள் டெக்ஸ்ட்டை அதாவது வரி வடிவத்தை ஆடியோவாக மாற்றி எடுத்துச்செல்ல வழி செய்கிற‌து இந்த தளம்.
http://www.carryouttext.com/



படிப்பதை விட கேட்பது நன்று என்னும் எண்ணம் கொண்டவர்களுக்கு உருவாக்கப்பட்ட ஆடியோ புத்தகங்களை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இதே போல நீங்கள் விரும்பி படிக்கும் செய்தி தளங்களில் உள்ள செய்திகள்,வலைப்திவாளர்களின் பதிவுகள்,ஆகிய‌வ‌ற்றை ஒலி வ‌டிவில் மாற்றிக்கொள்வ‌தை இந்த‌ த‌ள‌ம் சாத்தியாமாக்குகிற‌து.

அது ம‌ட்டும‌ல்ல‌ அவ‌ற்றை எம் பி 3 கோப்பாக ட‌வுண்லோடு செய்து கொள்ள‌லாம்.இத‌ன் பொருள் நாம் ப‌டிக்க‌ விரும்பும் செய்தி ம‌ற்றும் த‌க‌வ‌ல்க‌ளை ந‌ம்முட‌ன் கொண்டு சென்று விரும்பும் நேர‌த்தில் ஐபோட் போன்ற‌ சாத‌ன‌ங்களின் மூல‌ம் கேட்டு ம‌கிழ‌லாம்.

இத‌ற்கென‌ த‌னியே எந்த‌ சாப்ட்வேரையும் ட‌வுண்லோடு செய்ய‌ வேண்டிய‌தில்லை.சும்மா க‌ட் காபி பேஸ்ட் செய்தால் போதும் எம் பி 3 கோபாக‌ மாற்றி விட‌லாம்.

எதையும் கேட்க‌ நினைப்ப‌வ‌ர்களுக்கு மிக‌வும் ப‌ய‌னுள்ள‌ சேவை. இப்போதைக்கு இல‌வ‌ச‌மாக‌ உள்ள‌து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக