7.6.10


தொழில்நுட்பம் உண்மையில் எங்கோ போய் கொண்டிருக்கிற‌து.

ட‌ச் ஸ்கிரீன் தொழில்நுட்ப‌த்தின் உத‌வியோடு மேஜை அல்ல‌து எந்த‌ ஒரு ப‌ல‌கை போன்ற‌ ப‌ர‌ப்பையும் தெடு திரையாக‌ மாற்றி விடுவ‌த‌ற்கான‌ சாத்திய‌ம் உருவாகியுள்ள‌து.

மைக்ரோசாப்ட் இத‌ன‌டிப்ப‌டையில் சோத‌னை முய‌ற்சி ஒன்றை செய்ல்ப‌டுத்தி வ‌ருகிற‌து. இத‌ன் அடுத்த‌ பாய்ச்ச‌லாக‌ கைகளையே விசைப்ப‌ல‌கையாக‌ மாற்றும் ப‌ரிசோத‌னை முய‌ற்சியில் அமெரிக்க‌ ஆய்வு மாண‌வ‌ர்க‌ள் ஈடுப‌ட்டுள்ள‌ன‌ர்.

கார்ன‌கி மெலான் ப‌ல‌க‌லையை சேர்ந்த‌ கிரிஸ் ஹாரிஸ‌ன் எனப‌வ‌ரும் மைக்ரோசாபட் நிறுவனத்தைச்சேர்ந்த டெஸ்னே டான் என்னும் ஆய்வாளரும் சேர்ந்து இந்த விசைப்பலகையை வடிவமைத்துள்ளனர்.

போனில் பேச‌ வேண்டுமா? பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. அப்ப‌டியே கையை உய‌ர்த்தினால் போதும் அத‌ன் மீது செல்போன் விசைப்ப‌ல‌கை வ‌ண்ண‌ எழுத்துக்க‌ளாக‌ மின்னும். கை விர‌ல்க‌ளால் அவற்றின் மீது அழுத்தினால் போதும் போனில் பேச‌லாம் இதே முறையில் குறுஞ்செய்தி அனுப்ப‌லாம்.

போன் என்றில்லை ,வயர்லெஸ் மூலம் எம் பி 3 சாத‌ன‌த்தையோ,க‌ம்ப்யூட்ட‌ரையோ கூட‌ இய‌க்கலாம்.. இத‌ செய‌ல்பாட்டு சூட்ச‌மம் ம‌ணிக்க‌ட்டில் அணிய‌க்கூடிய‌ ஹை டெக் ப‌ட்டையில் உள்ள‌து.

இந்த‌ ப‌ட்டை தான் பைகோ புர‌ஜ‌க்டெர் என்று குறிப்பிட‌ப்ப‌டும் விசைப்ப‌ல‌கையை கை விர‌ல்களின் மீது தோன்ற‌ச்செய்கிற‌து. அத‌ன் பிற‌கு கை விர‌ல்க‌ளால் த‌ட்டும் போது உண்டாகும் நுண்ணிய‌ ஒலி அதிர்வுக‌ள் மூல‌ம் எந்த‌ எழுத்து டைப் செய்ய‌ப‌ப்டுகிற‌து என‌ப‌தை உண‌ர்ந்து கொள்கிற‌து.

இந்த அமைப்புக்கு ஸ்கின்புட் என்று பெய‌ர் சூட்டியுள்ள‌ன‌ர்.

செல்போனில் இண்டெர்நெட்டை அணுக‌ முடிந்த‌ பிற‌கு உலாவிக்கொண்டே இணைய‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து முக்கிய‌த்துவ‌ம் பெற்றுள்ள‌து.

இந்த‌ த‌ன்மைகேற்ப சேவைக‌ளை வ‌ழ‌ங்கும் நோக்க‌மும் உருவாகியுள்ள‌து. இப்ப‌டி தொழில்நுட்ப‌ம் திற‌ந்து விட்டிருக்கும் புதிய‌ வ‌ழிக‌ளை முழு வீச்சில் பயன்ப‌டுத்திக்கொள்ள‌ புதிய‌ சேவைகள் தேவைப்ப‌டுகின்ற‌ன‌.ப‌ழைய‌ க‌ட்டுப்பாடுகளை மீறி செய‌ல் ப‌ட‌ வேன்டியிருக்கிற‌து.

இப்ப‌டி சிந்த‌னை தாக்குத‌லுக்கு உள்ளாகி இருக்கும் க‌ட்டுப்பபாடுக‌ளில் ஒன்று தான் விசைப்ப‌ல‌கை.இணைய‌ தொழில்நுட்ப‌த்தில் பெரும் பாய்ச்ச‌ல் நிக‌ழ்ந்து கொன்டிருக்கும் வேளையில் மாமூலான‌ விசைப்ப‌ல‌கை ஒரு இட‌யூறு தானே.சாத‌ன‌ங்கள‌ன் அள‌வு சுருங்குவ‌த‌ற்கு ஏற்ப‌ விசைப்ப‌ல‌கை சுருங்க‌ வேண்டாமா?

ஆனால் விசைப்ப‌லைகை சுருங்கும் போது அவ‌ற்றை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில் சிக்க‌ல் ஏற்ப‌டுகிற‌தே. ஆனால் ஏன் ந‌ம‌க்கு அறிமுக‌மான‌ வ‌கையிலேயே விசைப்ப‌ல‌கையை அணுக‌ வேண்டும்.

ஏன் புதிய‌ விசைப்ப‌ல‌கைக‌ளை உண்டாக்க‌ கூடாது.விசைப்ப‌ல‌கை என்று த‌னியே இல்லாம‌ல் ந‌ம‌து தோளையே விசைப்ப‌ல‌கையாக‌ மாறறினால் என்ன‌? இப்ப‌டி யோசித்த‌த‌ன் விளைவு தான் ஸ்கின்புட் விசைப்ப‌ல‌கை.

த‌ர்போது சோத‌னை முறையில் முன்வைக்க‌ப்பட்டிருந்தாலும் எதிர் கால‌த்தில் இந்த‌ வ‌கை விசைப்ப‌ல‌கை ப‌ல‌ மாய‌ங்க‌ளை நிக‌ழ்த்த‌லாம்.

நாம் இணையத்தில் உலாவுவ‌தை க‌ம்ப்யூட்ட‌ர் ப‌ய‌ன்ப‌டுத்தும் விதத்தை இவை மாற்றிய‌மைக்க்லாம்.அதைவிட‌ முக்கிய‌மாக‌ உட‌ல் இய‌க்க‌ குறைபாடு கொண்ட‌வ‌ர்க‌ளுக்கு இவை பேருத‌வியாக‌ இருக்க‌லாம்.

http://www.chrisharrison.net/projects/skinput/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக